திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அங்கும் தமிழ் இல்லையே.! யார் குற்றம்?? ஆவேசமடைந்த பிக்பாஸ் விக்ரமன்.! வைரலாகும் பதிவு!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் விக்ரமன். அரசியல்வாதியான அவர் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் மிகவும் சகஜமாக பழகி ரசிகர்களை கவர்ந்தார். அவர் பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது சமூக கருத்துக்களையும் கூறி வந்தார்.
மேலும் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று அவர் பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் அசீம் வெற்றியாளர் ஆனார். ஆனாலும் விக்ரமனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விக்ரமன் அவ்வப்போது சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் விருதுநகரில் நடைபெற்ற தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் சங்க மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக விக்ரமன் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் விமானத்தில் கூட இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்பு செய்கிறார்கள். பல முறை இது தொடர்பாக கேள்வி எழுப்பியும் தமிழ் ஒலிப்பதில்லையே ஏன்? யார் குற்றம்?@aaichnairport @AAI_Official @JM_Scindia @IndiGo6E
— Vikraman R (@RVikraman) February 25, 2023
இந்த நிலையில் இதுகுறித்து விக்ரமன் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் விமானத்தில் கூட இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்பு செய்கிறார்கள். பலமுறை கேள்வி எழுப்பியும் தமிழில் ஒலிப்பதில்லையே ஏன்? யார் குற்றம்? என பதிவிட்டுள்ளார். அதற்கு பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.