#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேறப்போவது இவர்தானா? குழப்பத்தில் ரசிகர்கள்!
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
இந்தநிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் இரண்டாவது வாரத்தின் கடைசி நாளான இன்று எலிமினேஷன் நாள் என்பதால் வீட்டை விட்டு முதலாவதாக வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.
இந்த நிலையில் இன்றைய நாளுக்கான விறுவிறுப்பான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில் கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும், மக்களும் யாரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென விரும்புகிறார்கள் தெரியுமா? என்று ஒரு ட்விஸ்ட் ஆன கேள்வியை கேட்க, வீட்டில் இருக்கும் அத்தனை போட்டியாளர்களும் குழப்பத்தில் கமலின் முகத்தையே பார்க்கிறார்கள்.
அந்த காணொளியில் ஷாக்ஷியின் முகத்தில் மட்டும் வித்தியாசமான பயம் தெரிகிறது. அவர் பயந்து பார்த்ததும் அடுத்த ஷாட்டை கமலுக்கு வைக்க அவர் கோபத்துடன் சாக்ஷியை பார்க்கிறார். இந்த ப்ரோமோவை பார்க்கும்பொழுது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது சாக்ஷி தான் போல என ரசிகர்கள் பேசிவருகின்றனர்.