மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டில் பூர்ணிமா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்த நிலையில், தற்போது 7வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது 95 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் பணப்பெட்டியை எடுத்து கொண்டு யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று 16 லட்சம் பண பெட்டியை எடுத்து கொண்டு பூர்ணிமா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் பூர்ணிமா இதுவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி பூர்ணிமாவுக்கு ஒரு வாரத்திற்கு 1 லட்சம் என்று சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை பூர்ணிமா 13 வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார்.
எனவே இதுவரை அவருக்கு 13 லட்சம் சம்பளமும் பணபெட்டி 16 லட்சம் சேர்த்து மொத்தம் 29 லட்சம் பிக்பாஸ் வீட்டில் பூர்ணிமா சம்பாதித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.