#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக் பாஸ் ஜனனி ஐயர் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதை அவர் எதற்கு பயன்படுத்தினர் தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 2 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த தொடர் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில் வாரம் ஒருவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றன. கடந்த வாரம் நடிகர் டேனியல் பாலாஜி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் வீட்டில் மீதம் இருப்பவர்களில் நடிகை ஜனனி ஐயரும் ஒருவர்.
சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் நடந்த சிறந்த புன்னைக்காண டாஸ்கில் தான் வாங்கிய முதல் சம்பளம் பற்றி பேசியுள்ளார் நடிகை ஜனனி ஐயர்.
இதைப்பற்றி அவர் பேசுகையில் நான் நடிப்பு துறைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது எனவும், முதலில் நிறைய விளம்பர படங்களில் நடித்தேன் பின்பு எனது நடிப்பை பார்த்த இயக்குனர்கள் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததாக அவர் கூறினார்.
மேலும் தான் வாங்கிய முதல் சம்பளம் பற்றி அவர் கூறுகையில், நான் மாடலிங் செய்து வாங்கிய முதல் ரூ. 2, 500 ஆகும். அதையும் அவர் தனக்காக செலவு செய்யவில்லை. எனது வீட்டில் வேலை பார்த்த ஒருவர் தனது மகனின் டியூஷன் ஃபீஸை கட்ட முடியாமல் இருந்தார். எனவே அந்த பணத்தை அவரிடம் கொடுத்து டியூஷன் பீஸ் கட்ட சொன்னதாக கூறினார்.
தான் செய்த இந்து நல்ல காரியத்தை நினைக்கும் போது எண்ணத்தில் முகத்தில் புன்னகை வரும் என்று ஜனனி ஐயர் கூறினார். இவளவு காலம் சினிமா துறையில் இருந்தாலும் இதுவரை அவரால் முன்னணி நாடிகளின் பட்டியலில் இடம்பெற முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு நிறைய படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.