ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
லீக்கானது பெயர் பட்டியல்! இந்தமுறை பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்கள்தான்? செம மாஸ் லிஸ்ட்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பெயர் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த மூன்று சீசன்களாக ரசிகர்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளது என்றாலே போட்டியில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த பல்வேறு பெயர் பட்டியல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாவது வழக்கம். அந்தவகையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்ற இறுதிப்பட்டியல் என்ற பெயரில் ஒரு பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தப் பட்டியலின் படி, நடிகைகள் சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, நடிகை ரேகா, ரம்யா பாண்டியன், தொகுப்பாளர் அர்ச்சனா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்தப் பட்டியலில் புதிதாக அறந்தாங்கி நிஷாவின் பெயரும் இணைந்துள்ளது. அறந்தாங்கி நிஷா இந்த வருடம் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
அதே போல் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் ஆஜித், வேல்முருகன், நடிகர் ஆரி, பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தப் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் அனைத்தும் உண்மையா? இவர்கள் அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களா என்பது வரும் அக்டோபர் 4ம் தேதி உறுதியாகிவிடும்.