திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிக்பாஸ் புகழ் நடிகை வனிதா இளம் வயதில் இவ்வளவு அழகா? புகைப்படம் இதோ!
விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. பிக்பாஸ் சீசன் மூன்று மாபெரும் வெற்றிபெற்றது என்றால் அதற்கு வனிதாவும் மிக முக்கிய காரணம். சண்டைக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி மிக சுவாரசியமாக சென்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொத்தம் 7 படங்களில் நடித்துள்ளார் வனிதா. தளபதி விஜய்க்கு ஜோடியக சந்த்ரலேகா என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான இவர் மாணிக்கம், நான் ராஜாவாகப்போகிறேன், சும்மா நச்சுனு இருக்கு, MGR சிவாஜி ரஜினி கமல் என 4 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சந்திரலேகா என்ற தொடரில் நடிக்க உள்ளார் வனிதா. இந்நிலையில் தற்போது 45 வயதாகும் நடிகை வனிதாவின் இளம் வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகிவருகிறது.
அட நம்ம வனிதாவா இது என ரசிகர்கள் வியப்புடன் அந்த புகைப்படங்களை பார்த்துவருகின்றனர்.