மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த வாரம் பிக்பாஸில் பெட்டி படுக்கையோடு வெளியேறப்போவது யார்?; விபரம் இதோ.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 7-வது சீசன் 75 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் போட்டியாளர்கள் தங்களுள் வன்மத்தை வைத்து நாட்களை கடத்தி வருகின்றனர்.
மேலும் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வதால் சமூக வலைதளங்களில் பிக்பாஸ் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார்? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷனில் மணி, விஷ்ணு, தினேஷ், ரவீனா, நிக்சன், விஜய், மாயா ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். இதில் ரவீனா வெளியேற இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மாயா மற்றும் நிக்சனை விட மக்களிடமிருந்து ரவீணா அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் வெளியேற இருப்பதாக biggboss Booster என்ற X தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Happy new year and Bye Bye #Raveena#BiggBossTamil #BiggBossTamil7#BiggBossTamilSeason7 pic.twitter.com/NviiWwNnfm
— BiggBoss Booster (@bb_booster) December 29, 2023