மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் டைட்டில் வின்னர் அதிரடி கைது.! ஏன், என்னதான் நடந்தது?? பரபரப்பு சம்பவம்!!
தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அண்மையில் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் விவசாயம் செய்து, அது குறித்த பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததன் மூலம் பிரபலமடைந்த பல்லவி பிரசாந்த் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அமர்தீப் சவுத்ரி ரன்னரானார். வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பல்லவி பிரசாந்திற்கு ரூ 35 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்நிலையில் பல்லவி பிரசாந்தை காண ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவின் முன் ஏராளமான ரசிகர்கள் கூடியுள்ளனர். இதற்கிடையில் ரசிகர்கள் ரன்னரான அமர்தீப்பின் காரை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் அஸ்வினி, கீத்து கார்களும் தாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பேருந்துகளும், போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அஸ்வினி, கீத்து கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார், வன்முறையை ஏற்படுத்தும் வகையில் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செய்த காரியத்தால் பல்லவி பிரசாந்த் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். அங்கிருந்த சிசிடிவிக்கள் மூலம் மற்றவர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவர் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.