மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. எமோஷனலாகி, கதறி அழுத நடிகை விசித்ரா.! ஏன்னு பார்த்தீங்களா.!வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் சீசன் 7 ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 80 நாட்களை கடந்து நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அனல் பறக்க சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது Freeze Task நடைபெற்று வருகிறது.
ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு மிகவும் விருப்பமான இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை வருவர். அவ்வாறு இந்த சீசனிலும் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் வருகை தந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியுள்ளனர். போட்டியாளர்களும் தங்களது குடும்பத்தினரை கண்டவுடன் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நடிகை விசித்ராவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர். கணவரை கண்டதும் விசித்ரா எமோஷனலாகி கதறி அழுதுள்ளார். பின்னர் அவரது மகன்கள் மற்றொரு வழியில் வருகை தந்து விசித்ராவிற்கு மேலும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இந்தப் ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.