மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் ‘‘பிகில்’’ நான் தான்..! உண்மையை போட்டுடைத்த நடிகர் சூர்யா.!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி இணையவழியாக நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், லயோலா கல்லூரி சார்பில் முன்னாள் மாணவர்களில் சிறந்து விளங்கியவர்களுக்கு இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரும், நடிகருமான சூர்யா பேசினார். அப்போது சூர்யா பேசுகையில், முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் லயோலா கல்லூரியில் படித்த நினைவுகள் கண்முன்னே வந்து சென்றது. கல்லூரி காலத்தில் எனக்கு பாடத்தெரியாது. பாடலுக்கு விசில் அடித்து நான் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன். அதனால் என்னை ‘‘பிகில்’’ என்று கல்லூரியில் புனை பெயர் வைத்து என்னை அழைப்பார்கள். அப்படி அழைத்த பலர் இங்கே இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதுள்ள கொரோனா தொற்று காலத்தில் அனைவரும் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் ஜி.விஸ்வநாதன், லயோலா கல்லூரி முதல்வருமான ஏ.தாமஸ் அடிகளார், லயோலா கல்லூரியின் அதிபர் பிரான்சிஸ் பி.சேவியர் அடிகளார், கல்லூரி செயலாளர் செல்வநாயகம் அடிகளார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.