பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஸ்லிம்மாக மாறத்தொடங்கிய பிகில் பாண்டியம்மா.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்
தீவிர உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறைக்க தொடங்கியுள்ளார் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா.
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான ரோபோ சங்கரின் மூத்த மகள்தான் இந்திரஜா (பாண்டியம்மா). ரோபோ சங்கரின் மகள் என்பதையும் தாண்டி பிகில் படம் மூலம் பிகில் பாண்டியம்மா என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்இந்திரஜா.
பிகில் படத்தில் இவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும், தான் வரும் காட்சிகள் அனைத்தையும் தனக்கான களமாக மாற்றி, தனது நடிப்பினால் அனைவரையும் கவர்ந்துள்ளார் பாண்டியம்மா. இவரின் இந்த புகழுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவரின் உடல் எடைதான். மிகவும் குண்டான தோற்றத்தில் இருக்கும் பாண்டியம்மாவின் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
இருப்பினும் குண்டாக இருப்பது யாருக்குத்தான் பிடிக்கும்? எல்லோரும் உடல் எடையை குறித்து, சிக்கென இருக்கத்தான் ஆசைபடுவார்கள். தற்போது அந்த ஆசை நம்ம பாண்டியம்மாவிற்கும் வந்துவிட்டது. இதனால் என்னேரமும் பார்த்தாலும் ஜிம், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு தனது உடல் உடையை சற்று குறைத்துள்ளார் பாண்டியம்மா.
உடல் எடை சற்று குறைந்திருக்கும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.