மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரவுடி பேபி சாய் பல்லவியின் பிறந்தநாள்.! தண்டேல் படக்குழு கொடுத்த வேற லெவல் கிப்ட்.! என்ன பார்த்தீங்களா!!
மலையாளத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் அனைத்து மொழி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு, கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை சாய் பல்லவி. தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்திருந்தார்.
ரவுடி பேபி சாய்பல்லவி
இப்படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் அனைவரையும் குத்தாட்டம் போட வைத்தது. தொடர்ந்து அவர் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே திரைப்படத்தில் நடித்திருந்தார். சாய்பல்லவி தற்போது ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல் தயாரிக்கும் அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
பிறந்தநாள் பரிசு
மேலும் அவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் தண்டேல். இந்தப் படத்தை சந்தோ மோன்டெடி இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியளவில் பிரபல நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி இன்று தனது 32 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு வாழ்த்து கூறி தண்டேல் படக்குழு அவரை குறித்த ஸ்பெஷலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அது வைரலான நிலையில் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
You act. We celebrate.
— Thandel (@ThandelTheMovie) May 9, 2024
You perform. We cherish.
Happy Birthday 'Bujji Thalli' aka @Sai_Pallavi92 👑🫰🏻
On your special day here's a special gift from team #Thandel ⚓
▶️ https://t.co/Oyg6tF37pa#HBDSaiPallavi ❤🔥#Dhullakotteyala
Yuvasamrat @chay_akkineni @chandoomondeti pic.twitter.com/jCOtwh0Ny8