திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"இங்க இருந்து காப்பியடிக்க வேணாம்.. இங்க வந்தே எடுங்க" அட்லீயை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.!
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக தனது சினிமா கேரியரைத் தொடங்கியவர் அட்லீ. தொடர்ந்து இவர் 2013ம் ஆண்டு "ராஜா ராணி" திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதையடுத்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய "ஜவான்" திரைப்படம் உலகெங்கிலும் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. மேலும் அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அட்லீ, " ஜவான் படத்தின் சண்டைப் பயிற்சியாளர் ஸ்பீரோவுடன் இணைந்து படத்தை பார்த்த ஹாலிவுட் கலைஞர்கள் சிலர், எனக்கு ஹாலிவுட்டில் படம் இயக்க விருப்பமிருந்தால், நாம் இணைந்து பணியாற்றுவோம் எனக் கூறியதாக அட்லீ கூறியிருந்தார்.
இந்நிலையில், அட்லீ பேசிய இந்த வீடியோவை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், "இங்க இருந்து எடுக்க வேணாம். இங்க வந்தே எடுங்கன்னு தான் சொன்னாங்க" என்று அட்லீயை பங்கமாக கலாய்த்துள்ளார். முன்னதாக இவர் ஜவான் படத்தையும் கலாய்த்து வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.