வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
தக்காளியால் பாதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர்.. இணையத்தில் வைரலாகும் பதிவு.?
பாலிவுட்டில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சுனில் ஷெட்டி. இவர் இந்தி மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார். இவரது நடிப்பு திறமைக்கு என்று ரசிகர்கள் பெருகிக்கொண்டே தான் உள்ளனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகரான சுனில் செட்டி இணையத்தில் தக்காளியை குறித்து பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார். அப்பதிவானது தக்காளியால் பொதுமக்கள் மட்டுமின்றி நாங்களும் தான் பாதிக்கப்படுகிறோம். தற்பொழுது தக்காளியை சமையலில் காண்பது அரிதான ஒன்றாக இருக்கிறது.
தினமும் வீட்டில் பிரெஷ்சானா காய்கறிகளையே வாங்குவோம். ஆனால் தற்பொழுது தக்காளியை அவ்வாறு வாங்க முடியவில்லை. நாளுக்கு நாள் தக்காளியின் விலை அதிகமாய் கொண்டே போகின்றது. இதனால் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக பாலிவுட் நடிகர் சுனில் செட்டி பதிவில் கூறியிருக்கிறார். அப்பதிவில் இவ்வளவு பணம் இருந்தும் தக்காளி வாங்க காசு இல்லையா என்று ரசிகர்கள் நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இவர் ஹோட்டல் உரிமையாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.