பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கொரோனா பாதிப்பு ! தனிமைபடுத்தி சீல் வைக்கப்பட்ட பிரபல நடிகையின் குடியிருப்பு!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. இவர் இந்தி நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து கடந்த 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் மலைக்கா கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
அதனைத்தொடர்ந்து தற்போது 47 வயதுநிறைந்த மலைக்கா தன்னை விட வயது குறைந்த பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் 35 வயது மகன் அர்ஜூன் கபூரை காதலித்து வருகிறார். மேலும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகை மலைக்கா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த உயிரே திரைப்படத்தில் இடம்பெற்ற தைய தையா பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்நிலையில் மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நடிகை மலைக்காவின் வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் மலைக்கா வசித்த அடுக்கு மாடி குடியிருப்பு முழுவதும் கிருமி நாசினி தெளித்து, அதனை தனிமைப்படுத்தி சீல் வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.