53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
மெர்சல் விஜய்யின் மகனை புகழ்ந்து தள்ளிய பிரபல பாலிவுட் நடிகர்! இதுதான் காரணமா?
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ஹிட் திரைப்படம் மெர்சல். இதில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் பிளாஷ்பேக்கில் வரும் விஜய் மற்றும் நித்யா மேனன் ஜோடியின் மகனாக நடித்திருந்தவர் அக்ஷத் தாஸ்.
அந்த சிறுவன் நடிகர் விஜய்யுடன் சில காட்சிகளிலேயே நடித்திருந்தாலும் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு பெருமளவில் கவர்ந்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து அக்ஷத்
பாலிவுட்டில் வெளியாகியுள்ள சீரியஸ் மென் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 2-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Aakshath always made me realise that i should not treat him as a kid & he has a beautiful quality of understanding things from Directors point of view. These qualities made me surrender infront of the amazing #AakshathDas #SeriousMen pic.twitter.com/IqfdaTB0Rz
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) October 11, 2020
இந்நிலையில் சிறுவன் அக்ஷத்தை பாராட்டி பாலிவுட் நடிகர்
நவாஸுதீன் சித்திக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அக்ஷத் அவனை ஒரு குழந்தையாக நடத்தக் கூடாது என்பதை என்றும் எனக்கு உணர்த்துகிறான். இயக்குனர் பார்வையில் எதையும் சரியாக புரிந்து கொள்ளும் திறமை அவனுக்கு உள்ளது. இந்த அருமையான குணங்கள் என்னை அவன்முன் சரணடைய வைத்து விட்டது என கூறியுள்ளார்.