மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாய்ப்பு கிடைத்தால் போதும்.. சாய்பல்லவிக்காக ஏங்கித்தவிக்கும் பாலிவுட் நடிகர்..! போன் நம்பர்கூட இருக்காமே..!!
தென்னிந்திய திரையுலகில் பிரேமம் படத்திற்கு பின்னர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரை ரசிகர்களை நடிப்புத்திறமையால் கட்டிப்போட்டவர் நடிகை சாய் பல்லவி. இவர் கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர்.
கடந்த 2008-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' என்ற நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். இதன் மூலமாக அவருக்கு பல பட வாய்ப்புகளும் கிடைத்தன. தற்போது வரை பல முன்னணி தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் நடிகர்களுடன் இவர் திரையில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு சாய்பல்லவி தெலுங்கு நடிகர் ராணாவுடன் இணைந்து விரத பர்வம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாலிவுட்டில் மிகப்பிரபலமாக இருக்கும் நடிகர் குல்ஷன் தேவய்யா சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அதில் எனக்கு சாய் பல்லவி மீது பயங்கர கிரஷ். அவரின் போன் நம்பர் என்னிடம் இருந்தாலும் அவரை தொடர்புகொண்டு பேசுவதற்கு தைரியம் இல்லை.
அவர் ஒரு அற்புதமான நடிகை, நடன கலைஞர் என்பதால் அவர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது. எனது வாழ்க்கையில் அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன்.
அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கட்டாயம் அதை நான் கைவிட மாட்டேன். நல்ல கலைஞர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது அதனை யார்தான் தவறிவிடுவார்கள்?" என்று தெரிவித்தார்.