மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த நடிகருடன் முதல் லிப்லாக் முத்தகாட்சி.! டெட்டால் ஊற்றி வாயை கழுவினேன்.! பிரபல நடிகை உடைத்த பகீர் தகவல்!!
பாலிவுட் திரையுலகில் 80ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை நீனா குப்தா. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி வெள்ளித்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது பாலிவுட்டில் தமன்னா நடித்துள்ள லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடரில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் அவர் தான் முதல்முதலாக லிப்லாக் காட்சியில் நடித்தது குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். நடிகை நீனா குப்தா கூறியதாவது, பல வருடங்களுக்கு முன் நான் திலீப் தவானுடன் சீரியல் ஒன்றில் நடித்தேன். அதில் இந்திய தொலைக்காட்சியிலேயே முதன்முதலாக லிப்லாக் முத்தக் காட்சியை எடுத்தனர். அந்த காட்சியை நினைத்து நான் இரவு முழுவதும் தூங்கவில்லை. அந்த காட்சியில் நடிக்க உடல் ரீதியாக, மன ரீதியாக நான் தயாராக இல்லை.
மிகவும் பதட்டமாக இருந்தேன். கேமரா முன்பு சிலரால் நகைச்சுவை செய்யமுடியாது, சிலரால் அழுது நடிக்கமுடியாது. மிகவும் பதட்டத்துடன் நான் அந்த முத்தக்காட்சியில் நடித்தேன். பிறகு டெட்டால் கொண்டு எனது வாயை சுத்தம் செய்தேன். தெரியாத ஒருவருடன் முத்தமிடுவது ரொம்ப கடினமாக இருந்தது என கூறியுள்ளார்.