மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நேற்று தங்கை; இன்று அக்கா; அடுத்தடுத்ததாக உயிரிழந்த பிரபல நடிகைகள்.! சோகத்தில் ரசிகர்கள்!!
ஹிந்தியில் ஏராளமான சின்னத்திரை தொடர்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் டோலி சோஹி. இவர் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் டோலி சோஹி சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். அவரது சகோதரி அமந்தீப் சோஹி நேற்றிரவு காலமானார்.அவரும் பிரபல நடிகை ஆவார். அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமாகியுள்ளார்.
இதுகுறித்து அவரது சகோதரர் மனு,
உறுதிப்படுதியுள்ளார். மேலும் அவர் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறும் என்றும், கடினமான நேரத்தில் தங்களுடன் உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பாலிவுட் சின்னத்திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.