அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள்! மூடப்பட்ட தாஜ்மஹால்! ஏன்? வெளியான ஷாக் தகவல்!!



bomb-blackmailed-inside-tajmahal

உத்திரபிரதேசம் ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை தாஜ்மஹால் வளாகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்க உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

அதாவது மர்ம நபர் ஒருவர் உத்திரப்பிரதேச காவல்துறை கண்காணிப்பு அறைக்கு தொடர்பு கொண்டு தாஜ்மஹால் வளாகத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், எச்சரிக்கையாக பார்வையாளர்கள் தாஜ்மஹால் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும் தாஜ்மஹால் மூடப்பட்டது.

Bomb

அதனைத் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு படைகளுடன் சென்று தாஜ்மஹால் வளாகம் முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.  ஆனால் எவ்வித வெடி பொருட்களும் கிடைக்காத நிலையில், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு பின்னர் மீண்டும் தாஜ்மஹால் சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டது. மேலும் போலீசார்கள் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்து வந்த அழைப்பு பற்றி தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.