மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விவேக்கின் இறப்புக்குப் பின் இப்படி ஒரு காரணமா.? புதிய காரணத்தை வெளியிட்ட போண்டாமணி!
சின்ன கலைவாணர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். இவர் தனது திரைப்படங்களின் மூலம் சமூகத்திற்கு பயன்படும் விழிப்புணர்வுள்ள கருத்துக்களை நகைச்சுவையாக பேசி வந்தவர். கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமின் தீவிர ரசிகர் ஆன இவர் தமிழக முழுவதிலும் மரக்கன்றுகள் நடும் பணியையும் விழிப்புணர்வாக செய்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விவேக்குடன் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றியவர் நகைச்சுவை நடிகர் போண்டாமணி இவர் தற்போது விவேக்கின் மரணம் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கும் அவர் "நடிகர் விவேக்கிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தான் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் மீது அவர் உயிரையே வைத்திருந்தார். அந்தக் குழந்தை மரணம் அடைந்ததிலிருந்து அவர் மனம் உடைந்து போய்விட்டார்" என்று தெரிவித்திருக்கிறார்.
அதன் பிறகு எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களுக்கு ஆண் குழந்தை கிடைக்கவில்லை. டெஸ்ட்யூபின் மூலமும் இரட்டை பெண் குழந்தைகள்தான் பிறந்தது. இதன் காரணமாக ஒரு ஆண் வாரிசு இல்லையே என மிகவும் மன உளைச்சலில் இருந்ததாக போண்டாமணி தெரிவித்துள்ளார். இந்த மன அழுத்தத்தின் காரணமாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். என்னதான் திரைப்படங்களில் விழிப்புணர்வுள்ள கருத்துக்களை பேசினாலும் சொந்த வாழ்க்கை என்று வரும்போது எல்லோருமே சம்பிரதாயம் மற்றும் உலக வழக்கங்களை பின்பற்றுகின்றனர்.