மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமல் காரெல்லாம் கொடுக்கவில்லை.. இதான் நடந்தது.! கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவின் தந்தை விளக்கம்!!
கோவை தனியார் நிறுவனத்தில் முதல் பெண் ஓட்டுநராக பணிபுரிந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஷர்மிளா. அவர் அண்மையில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். பேருந்தில் திமுக எம்.பி கனிமொழி பயணித்த தினத்தன்று இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலும் பயணச்சீட்டு கொடுப்பதில் பெண் நடத்துனருடன் ஏற்பட்ட சிக்கலால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ஷர்மிளாவை நேரில் வரவழைத்து அவருக்கு வாடகை கார் ஓட்டுவதற்காக புதிய காரை பரிசாக அளித்ததாக தகவல்கள் பரவியது. மேலும் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. மேலும் கமல் தனது அரசியல் லாபத்திற்காகவே இவ்வாறு செய்வதாக பலரும் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து ஷர்மிளாவின் தந்தை கூறுகையில், கமல் சார் காரெல்லாம் கொடுக்கவில்லை. கார் வாங்கி கொள்ளுமாறு அட்வான்ஸ் பணமாக ரூ 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் சோர்வடையாமல் தைரியாக இருக்க வேண்டும். உங்களை போல் நிறைய பெண்கள் முன்னுக்கு வர வேண்டும் என ஷர்மிளாவை ஊக்கப்படுத்தியதாக அவர் கூறியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.