#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தளபதி 63 படம் வெளியாவதில் புது சிக்கல் - படத்துக்கு தடை கோரி புது வழக்கு!
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார் விஜய். தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த கூட்டணி தளபதி 63 படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார்.
படப்பிடிப்பு காட்சிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. வரும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் தளபதி 63 படத்தின் கதை என்னுடையது என்றும், தளபதி 63 படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழ்நாடு கால்பந்து மகளிர் அணி மற்றும் அதன் பயிற்சியாளரை மையமாகக் கொண்டும், மகளிர் அணி தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் முன் எதிர்கொள்ளும் இடையூறுகள் குறித்தும் கல்கி என்ற கதையை கடந்த 2017-ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்தேன்.
தற்போது அந்த கதையை தழுவி இயக்குனர் அட்லீ விஜய்யை வைத்து படம் இயக்கி வருவதாக மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.