பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அஜித்துக்கு போட்டியாக, சத்தமே இல்லாமல் வெளியான சர்க்கார் திரைப்படத்தின் புது அப்டேட்!
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது சர்க்கார் திரைப்படம். கடந்த அக்டோபர் இரத்தம் தேதி சர்க்கார் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டது. இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள்தான் தற்போது ஹாட் டாபிக்.
இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு சர்க்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. படம் முழுவதும் அரசியல் பேசப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம். இந்நிலையில் சர்க்கார் படத்தின் கதை திருட்டு கதை என ஒருபுறம் பிரச்னை போய்க்கொண்டிருக்க வரும் தீபாவளிக்கு சர்க்கார் திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருட்டு கதை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் சர்க்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க இன்று தல அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி தல ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. இதற்கு பதிலடி குடுக்கும் விதமாக சர்க்கார் படத்தின் சென்சார் போர்டு சான்றிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம். இதில் சர்க்கார் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.
#SarkarCensoredUA pic.twitter.com/iEhz1ke9yZ
— Sun Pictures (@sunpictures) October 25, 2018