#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பருத்திவீரன் பட சர்ச்சை.! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் சான்றிதழ்.!
கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீரின் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில், வெளியான பருத்திவீரன் திரைப்படம் குறித்த சர்ச்சை கடந்த 2 வாரங்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த திரைப்படத்தின் இயக்குனரான அமீர் பற்றி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் தெரிவித்தது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்டோர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர்.
மேலும் இயக்குனர் அமீர் தான் கடன் வாங்கி, சிரமப்பட்டு இந்த பருத்திவீரன் திரைப்படத்தை நல்லபடியாக எடுத்து முடித்தார். ஆனால், தற்போது அவரையே குற்றம் சொல்கிறீர்கள், அவரை அவமானப்படுத்திவிட்டீர்கள் என்று பலரும் கண்டனத்தை பதிவு செய்து வந்தனர்.
சசிகுமார், சமுத்திரகனி ஆகியோரின் கண்டனத்தை உறுதி செய்யும் விதத்தில், தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது அந்த திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் இணையதளத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. அந்த சான்றிதழில் தயாரிப்பாளர் என்ற இடத்தில் அமீரின் பெயர் தான் இருக்கிறது. இதனை குறிப்பிட்டு தற்போது சமூக வலைதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.