மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. செஃப் தாமுவா இது.! இளம் வயதில் எப்படி இருக்காரு பார்த்தீங்களா! வைரல் புகைப்படம்!!
தனது வித்தியாசமான, அசத்தலான சமையல் திறமையால் பிரபல சமையல் கலைஞராக மக்களை கவர்ந்தவர் செஃப் தாமு என்கிற கோதண்டராமன் தாமோதரன். இவர் தனது சமையல் திறமையால் பல விருதுகளையும், கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். மேலும் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார்.
செஃப் தாமு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக சமையலில் நிறைகுறைகளை கூறுவது மட்டுமின்றி, போட்டியாளர்களுடன் இணைந்து செய்யும் சேட்டைகள் அனைவராலும் பெருமளவில் ரசிக்கப்பட்டது. மேலும் இவர் யூடியூப் சேனலிலும் எக்கச்சக்கமான சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இல்லத்தரசிகளுக்காவும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களுக்காகவும் பல சமையல் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். செஃப் தாமு சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர். அவர் தான் இளம் வயதில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.