மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளியிலிருந்து விலகிய முக்கிய பிரபலங்கள்.! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் 5வது சீசனுக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையில், அதையே ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்கவைத்து ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கட் பட் ஆகியோர் பங்கேற்றனர். இருவருமே சமையலில் உள்ள குறை, நிறைகளை கூறுவது மட்டுமின்றி போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுடன் பேசி, விளையாடி நிகழ்ச்சியை மேலும் ரசிக்க
வைத்தனர். அவர்களுக்கெனவே பெரும் ரசிகர்கள் பட்டாளமும் உருவானது.
இந்நிலையில் செஃப் வெங்கட் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவரைத் தொடர்ந்து செஃப் தாமுவும் தானும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரும் செஃப் வெங்கட் பட்டும் ஒன்றாக இணைந்து விரைவில் புதிய நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.