விடுதலை 2ம் பாகத்தின் பாடல் நாளை வெளியீடு; காந்த குரலில் இழுக்கும் இளையராஜா.. ப்ரோமோ உள்ளே.!
மிக்ஜாம் புயல் மௌனம் கலைத்த விஜய்.! களத்தில் இறங்கிய ரசிகர்கள்.!
வங்க கடல் பகுதியில் சமீபத்தில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக, ஒட்டுமொத்த சென்னையும் நிலை குலைந்து போனது, அந்த புயல் ஆந்திராவில் கரையை கடந்திருந்தாலும், சென்னையில் பெய்த மழையின் காரணமாக, ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளக்காடாக மாறியது. தற்போது மெல்ல, மெல்ல பல்வேறு இடங்களில் மழை நீர் வடிந்து வருகிறது. ஆனாலும், துரைப்பாக்கம், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் இன்னமும் நீர் வடிந்தபடில்லை.
சென்னையில் பெய்த மழையின் காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் உணவுக்கு வழியில்லாமல் அவதியுற்று வருகிறார்கள். ஆகவே தமிழகத்தின் இதர மாவட்டங்களிலிருந்து தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் சென்னைக்கு வந்து, உதவ தொடங்கியிருக்கிறார்கள். மேலும் சில தங்களுடைய பகுதிகளிலேயே இருந்து கொண்டு உதவி வருகிறார்கள்.
இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வதற்கு, திரையுலகிலிருந்து முதன்முதலாக சூர்யா, கார்த்தி ஆகியோர் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினர். இதனை தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகரான ஹரிஷ் கல்யாண் 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இந்த நிலையில் தான், நடிகர் விஜய் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம் துயர்துடைப்போம்"என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு உதவி புரிய தொடங்கி விட்டனர். ஆனாலும் ஒரு சிலர் விஜய் சமூக வலைதளத்தில் பதிவு மட்டுமே வெளியிடுகிறார். அவர் நிதியுதவி செய்யலாம். அதை ஏன் செய்யவில்லை? என்று கேள்வியெழுப்பி வருகிறார்கள். ஆனால் தற்போது அவர் தன்னுடைய 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.