திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சந்தோஷ் நாராயணன் இசை பிரியர்களுக்கு உற்சாக செய்தி: நம்ம சென்னையில் நேரில் இசை நிகழ்ச்சியை கேட்டு கொண்டாட தயாரா?.. விபரம் உள்ளே.!
தமிழ் திரையுலகில் அட்டகத்தி, பீசா, சூதுகவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், 36 வயதினிலே, இறுதிச்சுற்று, பைரவா, கொடி, காலா, வடசென்னை, கடைசி விவசாயி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன்.
இவரின் இசையில் வெளியான பல பாடல்கள் பிரபலமாகி ஒவ்வொருவரையும் ரசிக வைத்திருந்தது. இது பின்னாளில் சந்தோஷுக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி இருந்தது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பெரியமேடு, ஜவஹர்லால் நேரு மைதானத்தில் வைத்து பிப்ரவரி 10ம் தேதி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சந்தோஷ் நாராயணன் இசை கச்சேரியில் நேரலை பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்விக்கிறார்.
இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நீயும் ஒலி என்ற தலைப்பில் நடக்கும் இசைக்கச்சேரிக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கு அழுத்தவும்:
Band Satham Tape Satham
— Making Moments (@MakingMomentsIN) December 14, 2023
Gaana Paatu Kaatha Suthum
Aaga Motham Pakka Celebration-u dhaaaa
Enga oor-u madras-u..Naanga varom Feb 10th-u
A @Music_Santhosh sambavam 🥁
Tickets live now :https://t.co/qWVX1xdEq3
📍Feb 10, Jawaharlal Nehru Outdoor Stadium@TFPCOffl #NeeyeOliOnFeb10 pic.twitter.com/mQ07oBcqWa