ஸ்வாதியால் ஸ்வாகாவான 550 சவரன்.. மாடல் அழகியுடன் மன்மதனாகி மண்ணைக்கவ்வி கம்பி என்னும் சேகர்..!
தொழிலதிபரிடம் இருந்து பரிசாக பெற்ற 550 சவர நகைகளை விற்று மது அருந்தி தீர்த்துவிட்டதாக மாடல் அழகி பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பூந்தமல்லியில் குடும்பத்துடன் தங்கியிருந்து பைனான்ஸ் தொழில் செய்து வந்தவர் சேகர். இவருக்கு பூர்வீகம் தூத்துக்குடியாகும். இவர் வட்டிக்கு விட்ட பணத்தில் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட நிலையில், அதனை திருடி சென்று காதலிக்கு பரிசாக கொடுத்து தற்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.
மாடல் அழகி சுவாதி என்பவரிடம் இவர் 550 சவர நகைகளை கொடுத்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், சேகரின் மனைவியான தமிழ்ச்செல்வி உடல்நலக்குறைவு காரணமாக தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தனக்கு சாதகமாக்கிய சேகர் ஹோட்டல்களுக்கு சென்று புரோக்கர் மூலமாக சுவாதி என்ற பெண்ணுடன் அறிமுகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
தொடக்கத்தில் சுவாதிக்கு ஆயிரக்கணக்கில் அள்ளிக்கொடுத்த சேகர் அவர் மாடல் அழகி என்று தன்னை அறிமுகப்படுத்தியதால், அவரின் அழகில் மயங்கி லட்சங்களில் பணம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் 550 சவர நகைகள், 30 லட்சம் பணம், 4 சொகுசு கார்கள், ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் போன்றவற்றையும் தான் பெற்ற வட்டி பணத்திலிருந்து வாங்கி கொடுத்துள்ளார்.
விசாரணைக்கு முன்னதாக சுவாதியிடமிருந்து 700 கிராம் நகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள நகைகள் எங்கே? என்று கேட்டபோது "எனக்கு மது அருந்தும் பழக்கமுள்ளது. இதனால் நகை மற்றும் பணத்தை வைத்து ஆசைதீர பல நாட்கள் மது அருந்தி வந்தேன். இவ்வாறு மது அருந்தியதால் அந்த நகைகள் அனைத்தும் தீர்ந்து விட்டன" என்று தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் "தன்னுடன் சேகர் இன்பமாக இருந்தபோது, அதற்கு கட்டணமும் தரப்பட்டுள்ளது. அதனை கேட்கவும், பரிசு கொடுத்த நகைகளை வாங்கவும் யாருக்கும் உரிமை இல்லை" என்று தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின் 4 கார்களில் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள கார் மற்றும் இருசக்கர வாகனம் எங்கே? என்று கேட்டபோது, சுவாதியின் இளம்காதலனான மற்றொரு ஆண் நண்பருக்கு அதனை கொடுத்ததாக தெரியவந்துள்ளது.
சினிமா வாய்ப்பிற்காக பலமுறை முயற்சி செய்தபோதும் அது கிடைக்காத நிலையில், பின்னாட்களில் விரக்தியடைந்து "அழகை முதலீடாக்கி அதனை வைத்து சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டதாகவும், அப்போது சிக்கிய சேகரை நான் உபயோகம் செய்து கொண்டேன்" எனவும் அவர் தெரிவித்துள்ளார். சேகரின் இழப்பால் நொந்துபோன அவரின் குடும்பத்தினர் திருட்டு நகைகளை கண்டறிய கோரிக்கை வைத்துள்ளனர்.