#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரு மணி நேரத்திற்குள் ரஞ்சிதமே ரஞ்சிதமே சாதனையை முறியடித்த சில்லா சில்லா பாடல்... வைரலாகும் ட்விட்டர் பதிவு!!
தல அஜித் குமார் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் துணிவு. இப்படம் வருகின்ற ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடலான சில்லா சில்லா பாடல் நேற்று மாலை 6.30 மணியளவில் வெளியானது. அனிருத் வாய்ஸில் ஜிப்ரான் இசையமைப்பில் செம மாஸாக வெறித்தனமாக வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
தற்போது புதிய தகவலாக சில்லா சில்லா பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே விஜய்யின் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் சாதனையை முறியடித்து இருக்கிறது. ரஞ்சிதமே பாடல் 500k லைக்ஸ் பெற கிட்டத்தட்ட ஒரு மணி நேரங்கள் ஆன நிலையில் சில்லா சில்லா பாடல் வேறு 40 நிமிடத்தில் 500k லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
Another day Another record 🔥🏌️#Thunivu #Ajithkumar #ChillaChilla pic.twitter.com/QsouH2vJIr
— R O M A N (@__R0MAN__) December 9, 2022