மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்கதான்.. வளர்ப்பு அப்படி.! ஆவேசமாக பொங்கிய பாடகி சின்மயி! ஏன் பார்த்தீங்களா!!
பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்திரனை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. தனது குழந்தைகளுக்கு சின்மயி ட்ரிப்டா மற்றும் ஷ்ரவாஸ் என பெயரிட்டுள்ளார்.
அவர் கர்ப்ப காலத்தில் எந்த புகைப்படங்களையும் வெளியிடாமல், குழந்தை பிறந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் சின்மயி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சின்மயி 32வது வார கர்ப்ப கால புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். மேலும் இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்திற்கு நெட்டிசன் ஒருவர், வாழ்த்துகள் வைரமுத்து சார் என கமெண்ட் செய்துள்ளார். அதனை கண்டு ஆவேசமான சின்மயி, இந்த புகைப்படத்தை நான் பதிவிட்டேன். இதற்கு தமிழர் ஒருவர் இதனை பதிவிட்டுள்ளார். நான் எனது கர்ப்பக்கால புகைப்படத்தை வெளியிடாததற்கு உண்மையான காரணம் எனக்கு ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டதால் பயத்தில் வெளியிடவில்லை. பலாத்கார ஆதரவாளர், என்னை துஷ்பிரயோகம் செய்தவர் என் குழந்தைகளின் தந்தை என கூறுகிறார். நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். ரத்தத்துலயே ஊறுனது, வளர்ப்பும் அப்படி என்று சவுக்கடி பதிலடி கொடுத்துள்ளார்.