மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது..மறைந்த நடிகை சித்ராவின் பிறந்தநாளில் அவர் அப்பா செய்த காரியம்! கண்கலங்க வைக்கும் வீடியோ!!
பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்து பின்னர் படிப்படியாக தனது திறமையால் முன்னேறி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் சித்ரா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஏரளமான தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
இந்நிலையில் சித்ரா கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் அண்மையில் கூட விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் அவருக்கு மக்களின் நாயகி என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று விஜே சித்ராவிற்கு பிறந்தநாள். அதனை முன்னிட்டு அவரது பெற்றோர்கள் கேக் மற்றும் அவருக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி அவரது புகைப்படத்திற்கு முன்வைத்து பிறந்தநாளை கொண்டாடினர். அப்பொழுது கேக் வெட்டிய சித்ராவின் தந்தை தனது மகளின் புகைப்படத்திற்கு கேக் ஊட்டினார். இந்த வீடியோ வைரலாகி காண்போரை கண்கலங்க வைத்தது.