பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆஸ்கர் விழாவில் பிரபல நடிகரிடம் அறை வாங்கிய தொகுப்பாளர்.! அதன்பிறகு நடந்த தரமான சம்பவம்.!
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், தொகுப்பாளர் கிறிஸ் ராக் (Chris Rock) நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியின் தலைமுடி பற்றி நகைச்சுவையாகப் பேசினார். அவரைப் பற்றி ராக் பேசியபோது, ஸ்மித் மேடையில் ஏறி அனைவருக்கும் முன்னால் அவரை முகத்தில் அறைந்துவிட்டார்.
இந்தநிலையில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திடமிருந்து கன்னத்தில் பளாரென அறை வாங்கிய ஆஸ்கர் விழா நிகழ்ச்சி தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக்கிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அவர் அடி வாங்கிய சம்பவத்தை தொடர்ந்து, அவர் நடத்தும் மேடை நகைச்சுவை நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு திடீரென அதிகரித்துள்ளது.
We sold more tickets to see Chris Rock overnight than we did in the past month combined.
— TickPick (@TickPick) March 28, 2022
அந்த நிகழ்ச்சிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை $46 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பின் அது $341 டாலராக அதிகரித்துள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள அந்த டிக்கெட் நிர்வாகம், கடந்த ஒரு மாதமாக விற்கப்பட்ட டிக்கெட்டுகளை விட ஒரே இரவில் அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன என்று தெரிவித்துள்ளது.