பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இடிந்த வீடு, சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட பரியேறும் பெருமாள் பட நடிகர்! வீடு கொடுத்து உதவிய மாவட்ட கலெக்டர்!
பா.ரஞ்சித் தயாரிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தின் மூலமே மாரி செல்வராஜ் இயக்குனராக அவதாரமெடுத்தார். இது சமுதாயத்தின் அத்துமீறல்கள் குறித்த கதையை மையமாக கொண்ட படமாகும். இப்படத்தில் ஹீரோவாக கதிர் மற்றும் ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் பெற்ற வரவேற்பை தொடர்ந்து பல விருதுகளையும் குவித்துள்ளது. பரியேறும் பெருமாள் நடிகர் கதிருக்கு அப்பாவாக நாட்டுப்புற கலைஞர் தங்கராசு என்பவர் நடித்திருந்தார். அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தன் மனைவி பேச்சிக்கனியுடன் நெல்லை வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த தங்கராசு இடிந்த வீட்டில் சரியான உணவுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் கஷ்டப்படுவதை ஆசிரியர் ஒருவர் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உதவி கேட்ட நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவருக்கு உதவ முன் வந்துள்ளார். தங்கராசுவுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். மேலும் அவரது மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிகமாக வேலையும் வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில் தங்கராசுக்கு உதவிய ஆட்சியருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.