#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது.. லியோ படத்தில் இவரும் இருக்காரா.? வெளியான புதிய தகவல் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்.!
இளையதளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'லியோ'. இந்திய சினிமா ரசிகர்களே இந்ததிரைப்படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. கோலிவுட்டில் தற்போதைய ஹாட் டாபிக் 'லியோ' தான்.
ஏற்கனவே விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி "மாஸ்டர்" என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் விஜய்காக லோகேஷ் சில கமர்ஷியல் விஷயங்களை சேர்த்திருந்தார். ஆனால் லியோ படத்தை முழுக்க முழுக்க தன் பாணியில் மட்டுமே லோகேஷ் எடுத்துள்ளார்.
அதோடு இப்படத்தில் நடித்துள்ள நட்சத்திர பட்டாளங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு காரணம் எனலாம். 15 ஆண்டுகளுக்கு பிறகு திரிஷா, லியோ படத்தில் விஜயுடன் மீண்டும் இணைகிறார். மேலும் இப்படத்தில் அர்ஜுன் சஞ்சய தத், இயக்குனர்கள் கெளதம் மேனன், மிஸ்கின், மன்சூரலிகான் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும்,இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. இதனையடுத்து தற்போது விஜய் டிவி பாலாவும் இப்படத்தில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.