மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என்ன வரவனை போறவன் எல்லாம் வளர்த்து விட்டுட்டு இருக்க" வடிவேலு கூறிய வார்த்தையால் மனம் வேதனை அடைந்த காமெடி நடிகர் கொட்டாச்சி..
கோலிவுட் திரை உலகில் நடிகர், நடிகைகளுக்காக படங்கள் வெற்றி பெறுவது சாதாரணம். ஆனால் நகைச்சுவைக்காகவே பல படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றி அடைந்துள்ளன. இதன்படி நகைச்சுவையின் இரு வேறு உச்ச நட்சத்திரங்களான வடிவேலு மற்றும் விவேக் இருவரும் தங்களது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் படம் கண்டிப்பாகவெற்றி அடையும் என்று சொல்லலாம். விவேக், வடிவேலு இருவரும் இணைந்து நடித்த மைனர் மாப்பிள்ளை, நந்தவனத் தேரு, உன்னருகே நானிருந்தால், விரலுக்கு ஏற்ற வீக்கம் போன்ற பல திரைப்படங்கள் மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளன.
இது போன்ற நிலையில், பிரபல காமெடி துணை நடிகரான கொட்டாச்சி, வடிவேலு மற்றும் விவேக் குறித்து சில சம்பவங்களை பேட்டியளித்துள்ளார். அவர், "பெண்ணின் மனதை தொட்டு எனும் திரைப்படத்தில் விவேக் காமெடி நடிகராக நடித்திருந்தார். அவருடன் துணை நடிகராக நானும் நடித்திருந்தேன்.
இதனையறிந்த வடிவேலு விவேக்கிற்கு தொலைபேசியில் கூப்பிட்டு என்ன வரவனை போன்றவனை எல்லாம் வளர்த்துவிட்டு இருக்க. இது எல்லாம் சரி இல்லை. இப்படி பண்ணாத. என்று வடிவேலு கூறினாராம். அதற்கு விவேக் யாரும் வளர்த்து விடல, அவங்களுக்கு இருக்குற திறமையில் அவங்களே வாழ்ந்துக்கிறாங்க. என்று பெருமிதமாக பேசியிருக்கிறார். இவ்வாறாக கொட்டாச்சி பேட்டியில் பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.