#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காமெடியில் கலக்கிய நடிகர் கஞ்சா கருப்புவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா.?
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான காமெடி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் கஞ்சா கருப்பு. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பின்னர் சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஒரு படத்தை தயாரித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான போர்வெல்ஸ் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். ஆனால் இப்படம் வெளியானது கூட யாருக்கும் தெரியவில்லை.இப்படத்தின் மூலம் தனது மொத்த சொத்தையும் இழந்தது மட்டுமின்றி தான் வாழ்ந்த பாலா அமீர் இல்லாத்தையும் இழந்தார். அதன் பின் சில நாட்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்று பேசிய நடிகர் கஞ்சா கருப்பு கண்ட கண்டவர்கள் எல்லாம் சென்னையில் சுற்றிக் கொண்டிருக்கும்போது இந்த கஞ்சா கருப்பு சுத்த கூடாதா? சென்னையில் தான் இருக்கிறேன். தற்போது மாதம் 30,000 ரூபாயில் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். சொந்த வீடு போனாலும் வாடகை வீட்டில் சந்தோஷமாகத்தான் நான் இருக்கிறேன். தற்போது நான் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.