திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காமெடி நடிகர் ஜனகராஜை நியாபகமிருக்குதா.? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே.!?
தமிழ் சினிமாவில் 80களின் காலகட்டங்களில் இருந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கி வந்தவர் நடிகர் ஜனகராஜ். நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அவருடைய சிரிப்பும் நகைச்சுவை திறமையும் தான்.
நடிகர் ஜனகராஜன் திரைப்பயணம்
அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இன்றுவரை நீங்கா இடத்தை பிடித்துள்ளார். கவுண்டமணி செந்தில் போன்ற நகைச்சுவை ஜாம்பவான்கள் வலம் வந்த பிறகு காமெடியில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வந்தார் நடிகர் ஜனகராஜ்.
முதன்முதலில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் நடிகர் ஜனகராஜ். இதன் பின்னர் 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இப்படத்தில் இவரின் நடிப்பு பாராட்டைப் பெற்று தொடர்ந்து திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
ஜனகராஜின் தற்போதைய புகைப்படம்
மேலும் இவர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற நிலையில் சமீபத்தில் யூ ட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகர் ஜனகராஜின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்புகைப்படத்தில் இவர் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.