மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அழ வச்சதுக்கு ஒரு அவார்டா" தனக்கு கிடைத்த விருது குறித்து வடிவேலுவின் பேட்டி..
தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக இருந்து வருபவர் வடிவேலு. இவர் 80களில் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து தனது நடிப்பு திறமையை தமிழ் சினிமாவில் வெளிப்படுத்தி வருகிறார்.
தனது காமெடி திறமையாலும், உடல் அசைவுகளாலும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் திறமை உடையவர் வடிவேலு. இவருக்கு பின்பு தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்திருந்தாலும் வடிவேலுவை போல் ஒரு காமெடி நடிகர் இல்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே உள்ளது.
இது போன்ற நிலையில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகராக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் வடிவேலு சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் வடிவேலுவின் நடிப்பு மிகப் பெரும் பாராட்டை பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்ததையடுத்து தற்போது வடிவேலுவின் நடிப்பிற்கு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. அதில் பேசிய வடிவேலு அழ வச்சதுக்கு அவார்டு கொடுக்குறீங்க என்று காமெடியாக பேசியிருந்தார். மேலும் மாரி செல்வராஜிற்க்கு தான் இந்த விருது சேரும் என்றும் கூறியிருந்தார்.