பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
புத்தகம் வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மீது போலீசில் புகார்! ஏன் தெரியுமா?
பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் கரீனா கபூர். இவர் நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கரீனா கபூர் ஏற்கனவே தைமூர் அலிகான் என்ற மகன் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு தாயானார்.
இந்தநிலையில் கரீனா கபூர் தனது பிரசவகாலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் தான் சந்தித்த சவால்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். பிரக்னன்சி பைபிள் என்ற பெயரில் எழுதப்பட்ட அந்த புத்தகம் கடந்த தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தனது மூன்றாவது குழந்தை என்று குறிப்பிட்டு கரீனாகபூர் சமூக வலைத்தளத்தில் அந்த புத்தகத்திற்காக விளம்பரம் செய்திருந்தார்.
இந்த நிலையில் புத்தகத்தின் பெயரில் பைபிள் என இருப்பது மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாக மராட்டிய மாநிலம் பீட் நகரைச் சேர்ந்த அல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகா சங்கம் என்ற அமைப்பு பீட் நகரில் உள்ள சிவாஜி நகர் போலீசில் புகார் அளித்துள்ளது. கரீனா கபூர் மற்றும் புத்தகத்தின் இணையாசிரியர் அதிதி ஷா ஆகியோருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், புகார் வந்தது உண்மைதான். ஆனால் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதுகுறித்து மும்பையில் புகார் அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.