திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஷாருக்கான் வீட்டின் முன்பு போராட்டம்.! அட்லியின் ஜவான் தான் காரணமா.? ரசிகர்கள் கேள்வி..
பதான்' படத்திற்கு பிறகு, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் 'ஜவான்'. இப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. முதன்முதலில் அட்லீ பாலிவுட் நடிகரை வைத்து இயக்கியிருக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது.
இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், மும்பையில் ஷாருக்கான் வீட்டிற்கு முன் "அன்டச் இந்தியா பவுண்டேஷன்" அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர், " பாலிவுட் நட்சத்திரங்கள் ஆன்லைன் ரம்மி செயலியை கவனித்து வருகின்றனர்.
இது தவறானது என்று அவர்களுக்கே தெரியும், இருப்பினும் அவர்கள் பணத்திற்காக இதை விளம்பரப்படுத்துகின்றனர். நாம் நம் பணத்தை செலவழித்து படம் பார்த்து இவர்களைப் பிரபலப்படுத்துகிறோம்' என்று அவர் பேசினார்.