மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காமெடி நடிகர் விவேக் மற்றும் வடிவேலு இருவருக்கும் இடையில் இருந்த பனிப்போர்.. நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் திறந்த காமெடி நடிகர்.?
தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களாக வடிவேலு மற்றும் விவேக் இருவரும் இருந்து வந்தனர். 90களின் ஆரம்பங்களிலிருந்தே தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திரமாக கலக்கி வருகின்றனர். இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இருவர்களுக்கும் இடையில் சிறு மோதல் இருந்ததாக திரைத்துறையில் பேசி வருகின்றனர்.
காமெடி நடிகர் வடிவேலு தனது நகைச்சுவை மற்றும் பாடி ஸ்டைல் மூலமாக பல நகைச்சுவை ரசிகர்களுக்கு தொடர்ந்து விருந்து அளித்தார். இடையில் அரசியலில் இறங்குகிறேன் என்று தன் சினிமா வாழ்க்கையை தானே அழித்துக் கொண்டார். விவேக் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர் கூட்டத்தை பெருக்கினார்.
இது போன்ற நிலையில், வடிவேலு மற்றும் விவேக் அவர்களுக்கு இடையே இருந்த மோதல் பற்றி தற்போது சககாமெடி நடிகரான சுகுமார், பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, "தமிழ் சினிமாவில் வடிவேலு ஒரு டீம் விவேக் ஒரு டீம்.
அரசியலைப் போலவே சினிமாவிலும் நடிகர்கள் அரசியல்வாதிகளை போல நடந்து கொள்வார்கள் என இவர்களை பார்த்து தான் தெரிய வந்தது. என்ன செய்தாலும் அதை செய்யாதே, இதை செய்யாதே என கூறிக் கொண்டே இருப்பார்கள். என்று பேட்டியில் விவேக் மற்றும் வடிவேலு குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.