மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளி பிரபலம் பாலாவிற்கு திருமணமா.! மணப்பெண் யார் தெரியுமா.!?
விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவராக இருந்து வருபவர் பாலா. இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்ன திரையில் காலடி எடுத்து வைத்தார். தனது அட்டகாசமான நடிப்பு திறமையினாலும், நகைச்சுவை உணர்வினாலும் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
இதனை அடுத்து ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை அடைந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரின் நகைச்சுவைக்கு தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றன. மேலும் இவர் ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து சமூக சேவைகளையும் செய்தும் வருகிறார்.
இது போன்ற நிலையில் சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்ற பாலா புதுச்சேரியில் 9 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை குறித்து பேசி இருந்தார். மேலும் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் என சொல்லிக் கொடுப்பதை விட்டுவிட்டு டோன்ட் டச் என சொல்லிக் கொடுங்கள் என்று பேசி இருந்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய பாலா, அடுத்த மாதம் அவரது காதலியை திருமணம் செய்ய போகிறேன் என்று மேடையில் குறிப்பிட்டுள்ளார். திடீரென்று பாலா திருமணம் செய்ய போவதாக கூறியிருப்பது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். ஆனால் அவரின் காதலி யார் என்பதை குறித்து இதுவரை எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.