திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குக் வித் கோமாளி பிரபலம் புகழின் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களா? கண்ணீருடன் அவரே கூறிய சோகமான தகவல்கள்!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி பிரபலமாக உள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் புகழ். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. புகழ் தனது வாழ்க்கையில் பல மோசமான நிகழ்வுகளை சந்தித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, எனது சொந்த ஊர் கடலூர்.நான் பள்ளிப்படிப்பு முடிந்த உடனே 2008 ஆம் ஆண்டு வேலைக்காக சென்னை வந்தேன். நிறைய பேர் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி என்னை ஏமாற்றினார்கள். அதன்பிறகு வெல்டிங் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். பின்னர் ரூபிங் வேலை பார்த்தேன். அப்போது என் கால் மீது ரூப் விழுந்து ஐந்து நரம்புகள் கட்டானது. அதன்பின்னர் ஸ்டூடியோவிற்கு எதிரேயுள்ள வாட்டர் வாஷ் கடையில் சேர்ந்தேன். இப்படி நான் சென்னையில் பார்க்காத வேலையே இல்லை. அப்பொழுதுதான் எனக்கு பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ் நட்பு கிடைத்தது.அவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். அவர் தான் இந்த நிகழ்ச்சியில் உனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று என்னை உற்சாகப்படுத்தி அதில் கலந்துகொள்ள சொன்னார். ஆனால் நான் ஆடிஷனிலேயே எலிமினேட் ஆகிவிட்டேன்.
இதற்கு காரணம் என முடிதான் என நினைத்து மொட்டை அடித்துக்கொண்டு மீண்டும் ஆடிஷனில் கலந்து கொண்டேன்.அதிலும் என்னை எலிமினேட் பண்ணிட்டாங்க. பின்னர் நான் சொந்த ஊருக்கே சென்று விட்டேன். அங்கு கணினி சம்பந்தமான வேலைகளை கற்றுக்கொண்டேன். அப்பொழுதுதான் டப்பிங் ஸ்டூடியோவில் சிஸ்டம் சர்வீஸ் வேலை இருக்கு என்று சொன்னார்கள். ஆனால் எனது கெட்ட நேரம் அப்பொழுது எனது கணினி சம்பந்தமான பொருட்கள் அனைத்தும் தொலைந்து போய்விட்டது.
அதனால் மறுபடியும் நான் வாட்டர் வாஷ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன்.பின்னர் சிரிப்புடா என்ற நிகழ்ச்சியில் பாம்பாட்டி கெட்அப் போட என்னை அழைத்தார்கள். பின்னர் தொடர்ந்து சின்ன சின்ன ரோலில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து கலக்கப்போவது யாரு சீசன் முடிந்த நிலையில் அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் எனக்கு லேடி கெட்டப் கொடுத்தார். அதன்பிறகு எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் அது இது எது, சிரிச்சா போச்சு என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டேன்.இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.