மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. குக் வித் கோமாளியில் இந்த பிரபலங்கள் போட்டியாளர்களா!! அப்போ கலகலப்புக்கு பஞ்சமிருக்காது.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் செஃப் தாமு மற்றும் வெங்கட் பட் இருவரும் நடுவர்களாக இருந்தனர். நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதில் இவர்களது பங்கும் பெருமளவில் இருந்தது. இந்நிலையில் செஃப் வெங்கட் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்க உள்ளார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்த பட்டியல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி பிக்பாஸ் பிரபலங்களான பூர்ணிமா ரவி, தினேஷ், யூடியூப் பிரபலம் இர்ஃபான், நடிகர் விடிவி கணேஷ், தொகுப்பாளினி ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளதாக பெயர்கள் அடிபட்டு வருகிறது. தொடர்ந்து விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி பிரியங்காவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் நிகழ்ச்சி மீது ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.