மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Cook With Comali Promo: குக்வித் கோமாளி.. சிரிக்க ரெடியா பங்களாளி? உங்க சிரிப்புக்கு நாங்க கேரண்டி... கோமாளியாக இணைந்த புகழ், ராமர்..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, மக்கள் மத்தியில் கொரோனா காலத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி (Cook With Comali). முதல் சீசனில், சமையல் போட்டியில் கலந்துகொண்ட திரை பிரபலங்களுடன், விஜய் தொலைக்காட்சி பிரபலங்களும் கலந்து பலரையும் சிரிக்கவைத்தனர்.
தற்போது தொடர் வெற்றியை அடுத்து ஐந்தாவது சீசனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அடியெடுத்து வைக்கிறது. இந்த சீசனில் வித்தியாசமான விளம்பரத்தை மேற்கொண்டுள்ள விஜய் டிவி நிர்வாகம், விமானத்தில் குழுவினரை அழைத்து வந்தது. அதன் வாயிலாக நிகழ்ச்சியில் நடுவராக தாமுவுடன், ரங்கராஜ் கலந்துகொள்கிறார். ரக்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
போட்டியாளர்கள் தொடர்பான அறிவிப்பும் அடுத்தடுத்து வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புகழ் மற்றும் ராமர் ஆகியோர் மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உறுதியாகி இருக்கிறது. இதன் ப்ரோமோ விஜய் டிவி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.