மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளியில் சமைத்த உணவை சாப்பிட்டு மயங்கி விழுந்த சிறுவன்.? வைரலாகும் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. நகைச்சுவையும், சமையலும் சேர்த்து எப்படி ரசிகர்களை ரசிக்க வைப்பது என்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி செய்து காட்டி வருகிறது.
பல சிசன்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு கோமாளியுடன் சேர்ந்து தங்கள் சமையல் திறமையை காட்டி சமைத்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில், மூன்று சீசன்களை தாண்டி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் ஒளிபரப்பாகவிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புரமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்தப் புரமோவில் குழந்தைகள் அழைத்துவரப்பட்டு அவர்களுக்கு சமைத்த உணவை வெங்கடேஷ் பட் ஊட்டி விடுகிறார்.
அப்போது ஒரு சிறுவன் எனக்கு காய்கறிகள் பிடிக்காது என்று கூறுகிறார். ஆனால் வெங்கடேஷ் பட் நீ கட்டாயமாக சாப்பிட வேண்டும் என்று வலுகட்டாயமாக ஊட்டிவிட சிறுவன் மயங்கி விழுந்து விட்டார். அனைவரும் பயந்து போக இது எல்லாம் பிராங்க் என்று கூறி சிறுவன் சிரிக்கிறான். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.