மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னை கறிவேப்பில்லையா பயன்படுத்தி தூக்கி போடுறாங்க - கூல் சுரேஷ் ஆதங்கம்..!
திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் கூல் சுரேஷ். இவர் சமீபமாகவே தன்னை சிம்புவின் தீவிர ஆதரவாளராக காண்பித்துக்கொண்டு வருகிறார். அவரின் படம் உட்பட பல தமிழ் படங்களுக்கு நேரடி விமர்சனங்களை கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று பத்து தல திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் கூல் சுரேஷ், "நான் பத்து தல திரைப்படத்தில் நடிக்கவில்லை. வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூற முடியாது. ஆனால், எனக்கு தகுந்த கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்று கூற வேண்டும்.
அப்படத்தின் இயக்குனரை எனக்கு 23 ஆண்டுகளாக தெரியும். படத்தின் பணிகள் தொடங்கிய நாட்களில் இருந்து வாய்ப்பு தருகிறேன் என இறுதியில் தவிர்த்துவிட்டார்கள். பலரும் என்னை கறிவேப்பில்லை போல் பயன்படுத்தி வருகிறார்கள். நான் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை.
நான் என் தலைவன் எஸ்.டி.ஆர்-க்காக, தமிழுக்காக குரல் கொடுத்து வருவேன். உங்களுக்கு உதவிக்கொண்டுதான் இருப்பேன். ரூ.10 கோடி ரூ.20 கோடி பணம் போட்டு படம் எடுப்பவர்கள் கூட விளம்பரம் செய்ய தெரியாமல் திணறுகிறார்கள். நான் எனக்கு தெரிந்த பாணியில் விளம்பரம் செய்கிறேன்" என தெரிவித்தார்.