மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா கூல் சுரேஷ்?.. வெளியான தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு மக்களிடம் பேராதரவை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஏழாவது சீசனில் நிறைவு கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் 15 நாட்களே போட்டி எஞ்சி இருக்கின்றன.
தற்போது வீட்டில் எவிக்சன் லிஸ்டில் விஷ்ணு, அனன்யா, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அர்ச்சனா ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர். இதில் கூல் சுரேஷ் மட்டும் வீட்டிலிருந்து வெளியேற முடிவு எடுத்து தப்பிச்செல்வது தொடர்பான செயல்களை மேற்கொண்டு இருந்தார்.
அவரை பிக்பாஸ் சமாதானம் செய்த போதும் அவர் சமாதானம் ஆகாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.